--- --:--:-- --

சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் ஜெயகோபால் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு

Capture

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது ஜாமீனில் வெளி வராத பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கரணை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது சாலையோரத்தில் இருந்தனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது லாரி மோதிய விபத்தில் பலியானார். இந்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon