மகளின் இன்ஸ்டா ரீல்லை பார்த்து அடித்து துவைத்த தந்தை..!
கெத்தாக சாலையில் சிகரெட் புகைத்துக் கொண்டே நடந்து சென்ற சிறுமியை வீட்டில் அவரது தந்தை அடித்து துவைத்த பரபரப்பு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்திருக்கிறது.
ரீல் மோகத்தால் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் இலசுகளுக்காக சமீப காலமாக இன்ஸ்டா மோகத்தால் இந்த 2k கிட்ஸ்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும். இப்படி லைக்காக ஆசைப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு சிறுமி சிகரெட்டை புகைத்து ஊதிக்கொண்டே பாக்கெட்டில் கைவைத்தபடி ஸ்டைலாக சாலையில் நடந்து சென்று அதை இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
சிறுமியின் வீடியோ வைரலாக பரவவே இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை சிறுமியை புரட்டி புரட்டி அடித்து துவைத்து விட்டார். சிறுமியின் தந்தை நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
எப்படி பார்த்தாலும் லைக்குக்கு ஆசைப்பட்டு ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் இளசுகள் பிடிப்பட்டால் சிறுவர்கள் என சொல்லி போலீசார் எச்சரிக்க மட்டுமே முடியும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





