சாலையில் திரியும் மாடுகள்..பரிதாபமாக பறிபோன உயிர்..!
மறைமலைநகரில் மாடு முட்டியதில் வீட்டின் முன் நின்று இருந்த 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி பெரியால் தெருவை சேர்ந்த முதியவர் கனியப்பன் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது சாலையில் சுற்றித்திரிந்த மாடு கன்னியப்பன் மீது மோதி அவரை தூக்கி வீசியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்காமல் அலட்சியமாக இருந்தவரும், நகராட்சி அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





