போதையில் தகராறு செய்த மகன்..கொலை செய்த தந்தை..!
கன்னியாகுமரி மாவட்டம் சிலுவைபுறம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஜினு என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனான ஜினுவின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார். இந்த நிலையில் திருமண வரன்கள் பார்த்து வந்துள்ளனர்.
ஆனால் இந்த வருடம் கை கூடாத நிலையில் விரக்தி அடைந்த ஜினு மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். மேலும் வேலை செய்து நிறுத்திவிட்டு வேலையை தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு வீட்டிற்கு ஜினு மதுபோதையில் வந்த பொழுது தந்தை செல்வராஜ் கதவை பூட்டி உள்ளார்.
ஆத்திரம் அடைந்த ஜினு கதவை உடைத்து திறந்து செல்வராஜ் வெளியே வந்த பொழுது சைக்கிள் செயினை கொண்டு தாக்க முயன்றுள்ளார் ஜினு. ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகில் இருந்த தேங்காய் உடைக்கும் கம்பியை எடுத்து ஜினுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் ஜினு துடிதுடித்து இறந்துள்ளார். மேலும் காலையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தந்தை செல்வராஜ் சரணடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





