--- --:--:-- --

சிறை கைதி தாக்கி வார்டன் காயம்..!

8

சேலம் சிறையில் கைதி தாக்கியதால் காயமடைந்த வார்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜய் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த ஏழு மாதங்களாக சிறையில் உள்ள விஜய் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் விஜய் சாப்பிட வராததால் அவரை சிறை வார்டன் ரஞ்சித் குமார் கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

 

அப்பொழுது கைதி விஜய் வார்டன் அஜித்குமாரின் கையில் இருந்த லத்தியைப் பறித்து அவரை தாக்கி கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த சிறை கண்காணிப்பாளர் காயமடைந்த வார்டன் ரஞ்சித் குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

மேலும் கைதி விஜயை உறவினர்கள் சந்திக்க இரண்டு மாதத்திற்கு தடைவிதித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon