--- --:--:-- --

ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து வேறொரு பெண்ணை திருமணம் செய்த காவலர்..!

3

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலரை பெண்ணின் உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

நித்திர விளை அடுத்த கீராத்துறை சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மகனுக்கும் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

 

நாளடைவில் காதலாக மாறியதால் இருவருக்கும் பெண்ணின் பெற்றோர் கிறிஸ்துவாலயத்தில் திருமணம் நடத்தி வைத்தனர் மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் காவலர் ஒருவர் ராஜேஷை பார்த்து தன்னுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்து ஏற்கனவே திருமணம் ஆன காவலர் போல இருப்பதாக சந்தேகம் அடைந்து கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு ராஜேஷ் மலுப்பலாக பதில் அளித்ததால் ராஜேஷின் புகைப்படத்தை whatsapp குழுவில் பகிர்ந்து வந்த பெண் காவலர் உறுதிப்படுத்தி உறவினர்களிடம் கூறினார். இதனால் கோபமடைந்த உறவினர்கள் ராஜேஷை சரமாரியாக தாக்கினார்.

 

அவரை காவலர்கள் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon