--- --:--:-- --

பேருந்து வசதி இல்லை.. கட்டி முடிக்காத பாலம்.. என்னதான் ஆனது..?

6

சத்தியமங்கலம் அருகே உள்ள இரு கிராமங்களுக்கு இடையே பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர் ஆபத்தை உணராமல் டெம்போவில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர்.

 

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள மார்க்கம்பாளையம் கிராமத்திற்கு கடம்பூரில் இருந்து நாள்தோறும் மூன்று முறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

 

மார்க்கம்பாளையத்திற்கு செல்ல வேண்டும் எனில் இவ்விரு கிராமங்களுக்கு இடையே ஓடும் குரும்பூர் சர்க்கரை பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த சூழலில் மழைக்காலங்களில் இந்த பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பேருந்து இயக்கப்படாமல் ரத்து செய்வது வாடிக்கையாகியுள்ளது.

 

அதன்படி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக குரும்பூர் சர்க்கரை பாலத்தில் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தால் அரசு பேருந்து இயங்கவில்லை. அதன் காரணமாக மார்க்கம்பாளையம் பள்ளிக்கு செல்ல டெம்போவில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணம் செய்தனர்.

 

இதனால் தங்களின் எதிர்காலம் கருதி தற்காலிகமாக பாதை அமைத்து பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon