சாலையில் படுத்துக்கொண்டு வம்பு செய்த போதை நபர்..!
தாம்பரம் அருகே மதுபோதையில் காவலரை காலால் எட்டி உதைத்தவரின் அடாவடி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதம்பாக்கம் பிரதான சாலை ஜோதி நகரில் மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற நபர் ஒருவர் அங்கு இலவசமாக சிக்கன் மற்றும் ஆம்ப்லெட் கேட்டுள்ளார்.
மதுபோதையில் அவர் மிரட்டல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உணவக ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக சாலையில் படுத்து உறங்க அவர்களை காலால் எட்டி உதைத்தார்.
காவல்துறையினர் திரும்பும் நேரத்தில் கால்களை நீட்டியபடி செல்போன் பார்த்த போதை நபரின் அடாவடியால் அங்கிருந்தவர்கள் முகம் சுளித்தனர். பின்னர் அவரை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்திய காவல்துறையினர் போதை நபரின் உறவினர்களை வரவழைத்து அவர்களோடு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





