--- --:--:-- --

அமைச்சர் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி..!

5

அமைச்சர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி நான்கரை லட்சம் ரூபாய் மோசடி செய்த காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் நாச்சியார்புரத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

 

ஆண்டிப்பட்டி சீனிவாச நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஜக்கையினை அனுப்பிய காவலர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனக்கு மிகவும் நெருக்கம் என்று கூறியுள்ளார். அவரை நம்பிய ஜக்கையன் தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக முன்பணமாக கொடுத்ததாக கூறியுள்ளார்.

 

வங்கி கணக்கு மற்றும் காசோலை பரிவர்த்தனை மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால் பணம் பெற்று 9 மாதங்களாகியும் அரசு வேலை வாங்கி தராததால் பணத்தை திருப்பி தரும்படி கேட்ட பொழுது செல்போன் எண்ணை பிளாக் லிஸ்டில் வைத்திருக்கிறார்.

 

பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. காவலர் பாக்யராஜ் மீது ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon