--- --:--:-- --

போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தம்பதி..!

4

சர்வதேச சந்தையில் 24 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை வீட்டில் பதுக்க வைத்திருந்த தூத்துக்குடி சேர்ந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கள்ளக்குறிச்சியில் விசாரணையை தொடர்ந்து போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

 

இதில் யுனிகோ நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நிர்மல் ராஜ் – ஷிவானி தம்பதியை பிடித்து விசாரித்துள்ளனர். அவர்கள் சுமார் எட்டு கிலோ போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

 

இந்திய மதிப்பில் எட்டு கோடி ரூபாய் அளவிற்கு கள்ள சந்தை விற்பனை செய்யப்படும். இந்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு 24 கோடி ரூபாய் என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon