திருவாடானையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம உதவியாளர் மீது வழக்கு.!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே என்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த டெய்லர் நாகராஜன், 49. இவர் தனது கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2 நிலம் வாங்கினார். இந்நிலங்களுக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் கோரி இணையதளத்தில் விண்ணபித்தார்.
இது தொடர்பான அனுமதிக்காக ஓரியூர் விஏஒ மாதவனை, டெய்லர் நாகராஜன் அணுகினார். பட்டா மாறுதலுக்கு பரிந்துரை செய்ய நாகராஜனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.
இதன் பின் ரூ.5 ஆயிரம் குறைத்துக் கொண்டு ரூ.20 ஆயிரம் கேட்டனர். இது தொடர்பாக நாகராஜன் புகாரின் பேரில் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் விஏஓ மாதவன் , கிராம உதவியாளர் காளீஸ்வரன் ஆகியோர் நாகராஜனை இன்று மீண்டும் தொடர்பு கொண்டு லஞ்சமாக பேசிய தொகை குறித்து கேட்டனர்.
இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை நாகராஜனிடம் இருந்து மாதவன் (31), காளீஸ்வரன் (34) வாங்கிய இருவரையும் ஊழல் தடுப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். இருவரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




