--- --:--:-- --

புதினுடன் கைகோர்த்த கிம் ஜாங் உன்..!

6

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் வந்து இறங்கிய புதினை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கட்டி தழுவி வரவேற்றார்.

 

போர் நீடித்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் புதினின் திட்டத்தில் ஒரு பகுதியாகவே வடகொரிய பயணம் அமையும் எனக் கூறப்படுகிறது.

 

வடகொரியா புறப்படுவதற்கு முன் உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா, தங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு புதின் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon