--- --:--:-- --

திருமணமான 4 மாதங்களில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

4

சோளிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காற்றம்பாக்கம் காலனியை சேர்ந்த கலையரசன் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சினேகா சோளிங்கரிலுள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

 

இவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் சினேகா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சினேகாவுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon