google மேப்பை பார்த்து சென்றதால் நடந்த சம்பவம்..!
google மேப்பை நம்பி சென்றவர்கள் ஓடைக்குள் கார் புகுந்து சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த சில இளைஞர்கள் இனோவா காரில் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
ஆலப்புழாவிலிருந்து மூணாறுக்கு சென்று கொண்டிருந்த பொழுது கூகுள் மேப்பில் காட்டியபடி காரை திருப்பி உள்ளனர். ஆனால் அங்கு சரியான பாதை இல்லாததால் கார் ஓடையில் இறங்கியுள்ளது.
பின்னர் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரை திறந்து உள்ளே இருந்தவர்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மண் அள்ளும் இயந்திரம் மூலம் கார் மீட்கப்பட்டது.
கடந்த மாதம் google மேப்பை பயன்படுத்தி சென்றவர்களின் கார் ஆலப்புழாவின் கால்வாய்க்காலில் புகுந்து விபத்து ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





