--- --:--:-- --

புதுவையை உலுக்கிய சிறுமி கொலை.. பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..!

10

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

 

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை ஆன வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஏற்கனவே 7,12,500 க்கான காசோலையை முதலமைச்சர் ரங்கசாமி கடந்த மார்ச் மாதம் வழங்கினார்.

 

ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் எதிர்பாராத விபத்தில் உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் சோலையை சட்டப்பேரவை உள்ள தனது அலுவலகத்தில் வைத்து முதலமைச்ர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon