நாடாளுமன்றத்திற்குள் நுழைய போலி ஆதார்.. மூவர் கைது..!
போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் புதிய அமைச்சரவை விரைவில் பதவி ஏற்க உள்ளது.
நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவி ஏற்பு நிகழவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்குள் தூய்மை பணியை மேற்கொள்வதற்காக ஒப்பந்த ஊழியர்களிடம் இருந்தனர்.
அவர்களிடம் வழக்கமான சோதனை மேற்கொண்டதில் 3 பேரின் ஆதார் அடையாள அட்டைகளும் போலியானது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை பிடித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





