காய்ச்சல் ஏற்பட்ட சிறுவனுக்கு தவறான ஊசி போட்ட மருந்தக உரிமையாளர்..!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் காய்ச்சல் ஏற்பட்ட சிறுவனுக்கு நடுவலூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற மருந்தக உரிமையாளர் ஊசி போட்ட பிறகு நிலைமை மோசமாகி சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தவறான ஊசியை சிறுவனின் மரணத்திற்கு காரணம் என உடற்கூறு ஆய்வு அறிக்கையில் வெளியே வந்ததையடுத்து உரிமையாளரை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





