--- --:--:-- --

பொறியியல் விண்ணப்பம் இன்றுடன் நிறைவு..!

8

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணபிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 2024 – 2025 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு கடந்த மே மாத ஆறாம் தேதி தொடங்கியது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

 

நேற்றைய நிலவரப்படி சுமார் 2 லட்சத்து 42000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. பொறியியல் படிப்புகளுக்கு விண்ணபிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

பொது பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 13-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது.

 

Right Menu Icon