2 செவிலியர்கள் மற்றும் 2 ஊழியர்களை கடித்த தெருநாய்..!
புதுச்சேரி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் மற்றும் இரண்டு செவிலியர்களை தெரு நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் தெரு நாய்களால் தொல்லை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து இரண்டு ஊழியர்கள் மற்றும் இரண்டு செவிலியர்களையும் மருத்துவமனையில் சுற்றி தெரியும் நாய்கள் கடித்துள்ளது.
நான்கு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரியும் தெரு நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





