டிடிஎப் வரிசையில் விஜே சித்து போலீசில் சிக்குவாரா..?
போன் பேசியபடியே கார் ஓட்டியதாக யூடியூப் விஜே சித்து மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அண்மையில் யூட்யூப் டிடிஎப்வாசன் செல்போனில் பேசியபடியே காரை ஓட்டியதற்காக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்த புகார் அளித்த வழக்கறிஞர் கூறுகையில் தொடர்ச்சியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யூடிபில் வீடியோ பார்க்கும் நிலையில் சித்து செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டும் வீடியோ வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் அனைத்து வீடியோக்களிலும் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





