--- --:--:-- --

செயினை பறித்து விட்டு பைக்கில் தப்பி சென்ற இளைஞர்கள் மீது மோதிய பேருந்து..!

8

ரியானாவில் பெண்ணிடமிருந்து தங்கச் செயினை பறித்துவிட்டு தப்ப முயன்றவர்கள் மீது அரசு பேருந்து மோதியது. ஹரியானா மாநிலத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ அருகே சென்ற இளைஞர் முகவரி கேட்பது போல் நடித்து பின்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் இருந்து செயினை பறித்தார்.

 

உடன் வந்த நபர் வைக்க ஸ்டார்ட் செய்து தயாராக இருக்க இதனை எதிரே வந்த அரசு பேருந்து ஓட்டுனர் கவனித்து பேருந்தை அவர்கள் மீது மோத செய்தார். பின்னர் இருவரும் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon