அக்கவுண்ட்டிற்கு லட்சக்கணக்கில் வந்து கொண்டு இருந்த பணம்.. வசமாக சிக்கிய கார் டிரைவர்..!
கோவை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி செய்த கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் நல்ல மங்கலத்தை சேர்ந்த ஜெய்ஸ்வீர் ராஜா என்பவர் மதுரையில் சிறப்பு தாசில்தாராக பணியாற்றுவதாக பலரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதை நம்பி கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது மனைவிக்கு அரசு வேலைக்கு 25 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த ஜேசுராஜாவிடம் அடையாள அட்டை கேட்ட பொழுது சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அரசு வேலை வாங்கி தருவதாக கோரி 16 லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீஸ் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





