--- --:--:-- --

போதை ஊசியால் உயிரிழந்த சிறுவன் வழக்கு.. 2 பேரிடம் போலீசார் விசாரணை..!

4

சென்னை புளியந்தோப்பு பகுதியில் போதை ஊசியால் சிறுவன் உயிரிழந்த நிலையில் அந்த சிறுவனுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

 

புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த 24 ஆம் தேதி போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தால் விசாரணையில் சிறுவன் போதை மாத்திரை உட்கொண்டது தெரிய வந்தது.

 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போதை மாத்திரை விநியோகம் செய்த நபர்களை தேடி வந்தனர். அப்பொழுது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். உயிரிழந்த சிறுவனுக்கு இவர்கள் தான் போதை மாத்திர விநியோகம் செய்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon