--- --:--:-- --

மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் தனது வேலையை பார்க்க ஆரம்பித்த இர்பான்..!

10

ருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிவித்து youtube இர்பான் சர்ச்சையில் சிக்கிய நிலையில் தற்போது youtube இல் அவர் வெளியிட்டு வரும் வீடியோக்கள் மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

 

தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறியும் ஆர்வத்தில் மனைவியை துபாய் அழைத்துச் சென்று இர்பான் கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என்பதை அறிந்து சிசுவின் பாலினத்தை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இது குறித்து இர்பானிடம் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான் அழைத்தது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிடுவதாகவும் உறுதி தெரிவித்திருந்தார்.

 

உறுதி தெரிவித்த பிறகும் சிசுக்கலைப்பு குறித்தான விழிப்புணர்வு வீடியோவை வெளியிடாமல் வழக்கம் போல சாலை ஓர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதும் தன் உறவினர் குழந்தைகளை அழைத்து செல்வதுமான வீடியோக்களை இர்பான் யூடியூபில் வெளியிட்டு வருவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon