பெண் கொடுக்க மறுத்ததால் இளைஞர் செய்த செயல்..!
பெண் கொடுக்க மறுத்ததால் விரக்தியில் அந்த பெண்ணின் புகைப்படத்துடன் தனது புகைப்படத்தை இணைத்து மார்ஃபிங் செய்து போலி திருமண அழைப்பிதழ் அளித்து ஊர் முழுவதும் கொடுத்த புதுக்கோட்டை மாவட்ட இளைஞரை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
திருமணத்துக்காக பார்த்த பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும் அவரையே திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





