--- --:--:-- --

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.. தேவஸ்தான நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!

1

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருவதால், இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.கோடை விடுமுறையையொட்டி, திருப்பதி திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

 

நேற்று மாலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் காத்திருந்தனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள், சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு காத்திருந்தனர்.

 

இதனால், இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை வரை பக்தர்கள் இலவச தரிசனத்துக்கான வரிசையில் செல்ல முயற்சிக்க வேண்டாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது.

 

தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon