பாடப்பிரிவுகளுக்கான கட்டணங்களை வெளியிட கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை செயலாளர் போட்ட உத்தரவு..!
பாடப்பிரிவுகளுக்கான கட்டணங்களை அரசு இணையதளத்தில் வெளியிட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில மாணவர் சேர்க்கை காண வழிமுறைகள் குறித்த அரசாணையை உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் பாடவாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விபரங்களை உயர்கல்வித்துறை அறிவித்துள்ள இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் மாணவன் சேர்க்கை விதிமுறைகளை 100 சதவீதம் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
விதிமுறைகளை மீறினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வரும் மாணவர் சேர்க்கைக் குழுவுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





