எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் வந்த காவல்துறை வாகனம்..!
உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவரை கைது செய்ய காவல்துறையினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் ஜீப்பை எடுத்து சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரிஷிகேஷ் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வரும் மருத்துவரான சதீஷ்குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு தனக்கு கீழ் பணியாற்றும் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவர் சதீஷ்குமாரை கைது செய்ய மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்பொழுது தபாங் திரைப்பட பாணியில் மருத்துவமனைக்குள் காவல்துறை வாகனத்தை இயக்கிச் சென்று அவரை கைது செய்தனர்.
அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் படுத்திருக்கும் பொழுது ஜீப் நுழைந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து படுக்கையை விட்டு வெளியேற்றினர். வீடியோ வெளியான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





