--- --:--:-- --

பேனர் வைத்தவர் மருத்துவமனையில் அனுமதி

_108800877_19a302e1-d49f-4a67-80cf-7a44461c5508

பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயகோபால் மகன் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சரிந்து சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்கிற இளம் பெண் மீது விழுந்தது.

 

அப்போது பின்னால் வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக பேனர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பள்ளிக்கரணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon