ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட வீடியோவை நீக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
காங்கிரஸ் எம்.பி., ராகுலை பற்றி புகழ்ந்து எக்ஸ் தளத்தில் தான் பதிவிட்ட வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார். தமிழகத்தில் அதிமுக சில ஆண்டுகளாக பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது.
நடப்பு மக்களவை தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் வீடியோவை பகிர்ந்து, தான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் எனப் பதிவிட்டிருந்தார்.
அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதால் காங்கிரஸை மறைமுகமாக ஆதரிக்கிறார் செல்லூர் ராஜூ என பேசப்பட்டது. இதற்கு விளக்கமளித்த செல்லூர் ராஜூ, அதிமுகவே நாங்கள் தான் என்றும், இதற்கு முன் பிரதமர் மோடியையும் தான் பாராட்டியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
ராகுலைப் பற்றி இவர் பகிர்ந்த வீடியோவால் அதிமுகவில் குழப்பம் நிலவியதாக கூறப்படும் நிலையில், இன்று தனது எக்ஸ் தளத்தில், ராகுலின் வீடியோவை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கினார்.





