ஆய்வுக்கு வராத 800 பள்ளி பேருந்துகளுக்கு அதிரடி தடை..!
சேலம் மற்றும் தர்மபுரியில் எண்ணூர் தனியார் பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தனியார் பள்ளி பேருந்து வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தர்மபுரி மாவட்டங்களில் 700 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்படவில்லை.
எனவே ஆய்வுக்கு வராத தனியார் பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நடத்திய பிறகு அந்த வாகனங்களை இயக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





