ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்.. செங்கல்பட்டில் திடீர் பரபரப்பு..!
மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த மின்சார ரயில்களால் அடுத்தடுத்து வந்த நான்கு மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரிலிருந்து பெருமாள் கோவில் இடைப்பட்ட பகுதிகளில் ஒரே தண்டவாளத்தில் 4 மின்சார ரயில்கள் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிக்னல் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில் சிக்னல் கோளாறு சரி செய்த பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.





