மெட்ரோ ஸ்டேஷனில் தூங்கியவர்கள் மீது ஆசிட் வீச்சு..!
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாயிலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில் அது அமோனியம் கரைசல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயம் அடைந்த நிலையில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்தனர்.
மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கருப்பட்டி காபி கடையில் வேலை பார்த்த ராஜா என்பவர் உரிமையாளரின் செல்போனை திருடியதாகவும் அதனை அங்கு அவரிடம் பணியாற்றிய ரேவதி, கணேசன் தம்பதி காட்டி கொடுத்ததாக கூறி பழி வாங்குவதற்காக பாட்டிலில் அமோனிய கரைசல் எடுத்து வீசியதாகவும் கிண்டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





