பாஜக அலுவலகம் செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்.!
பாஜக தலைமையகத்தில் ஆம் ஆத்மி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், டெல்லி போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைதானதில் இருந்து டெல்லி அரசியல் கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடையுங்கள் எனவும், தாங்களே பாஜக அலுவலகம் வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.






