சீரியல் நடிகை விபத்தில் பலி.. துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட காதலன்..!
சமீபத்தில் கன்னட, தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்த நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் இறந்து போனார். இது தெலுங்கு மற்றும் கன்னட சின்னத்திரையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களே ஆன நிலையில் மறைந்த பவித்ராவின் காதலர் சந்திரகாந்த் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். பல தெலுங்கு சீரியங்களில் இவர் நடித்துள்ளார். பவித்ராவை இழந்த துக்கத்தில் கடும் வேதனையில் சந்திரகாந்த் இருந்துள்ளார்.
நண்பர்கள், உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர். ஆனாலும் மனம் தாங்க முடியாமல் ஹைதராபாத் குருநகர் பகுதியான மணிகண்டா பகுதியில் உள்ள தனது வீட்டில் சந்திரகாந்த் தற்கொலை செய்து கொண்டார். பவித்ராவும், சந்திராவும் ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பத்தில் பிரிந்தவர்கள்.
இதனால் இருவருக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது. விரைவில் திருமணம் செய்து கொண்டு வாழ இருந்த நேரத்தில் ஒரு விபத்து இருவரின் உயிரையும் பறித்து விட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





