--- --:--:-- --

கண்ணு கெட்டிய வரை கார் தான்.. ஸ்தம்பித்த வாகன ஓட்டிகள்..!

10

தர்மபுரியில் நான்கு வழிச்சாலை பணியால் சேரும் சகதியுமான சாலைகள் கனரக வாகனங்கள் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றன. தர்மபுரி மாவட்டம் அரூர் மஞ்சவாடி வழியாக உள்ள இருவழிச் சாலையில் நான்கு வழி சாலையாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

 

இதற்கிடையே போக்குவரத்துக்காக மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மண் சாலை சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் கனராக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் சுமார் 10 கிலோமீட்டர் அணிவகுத்து நின்றது.

 

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே நான்கு வழிச்சாலைக்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon