--- --:--:-- --

விபத்தில் சிக்கிய இளைஞர்..நாமக்கல் கலெக்டர் உதவி..!

3

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட வந்தார்.

 

அப்பொழுது நாமக்கல் அருகே உள்ள பொம்மகுட்டை மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

 

இதை பார்த்த மாவட்ட ஆட்சியர் உமா உடனடியாக வாகனத்தை நிறுத்தி, அந்த வாலிபரை மீட்டு தன்னுடன் வந்த அரசு வாகனத்தை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆம்புலன்சுக்கு காத்திருக்காமல் அரசு வாகனத்தில் சிகிச்சைக்காக இளைஞனை அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் உமாவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்.

Right Menu Icon