--- --:--:-- --

தென்தமிழகத்தில் முதன்முறையாக காற்றேற்றல் முறையில் மூச்சுக்குழாயை விரிவுப்படுத்தி சாதனை!!

a97d4b46-4386-457e-a755-77f92f42beb8

25 வயது நிரம்பிய இளைஞர் சாலை விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் நான்கு மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு மூச்சுப் பெருங்குழாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை முடித்து வீடு திரும்பினார். சில நாட்களுக்கு பின்பு அவருக்கு மறுபடியும் சுவாச கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

 

அதனால் மூச்சுகுழாய் தொடர்பாக பல சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டது ஆனால் எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. ஆகையால் மூச்சு குழாய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அந்த சிகிச்சை மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை என்பதால் இதற்கு அந்த நோயாளி உடன்படவில்லை மேலும் மாற்று கருத்துக்காக அப்போலோ சிறப்பு மருத்துவமனை மதுரைக்கு வந்தார்.

அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் நுரையீயல்நோய் சிகிச்சை நிபுணர்கள் இதனை ஆராய்ந்து கலந்து ஆலோசித்தனர். அந்த சுவாசக்குழாயில் அடைப்பை அகற்றி சுவாசதடையினை நீக்க ஏதேனும் வழியுள்ளதா என கண்டறிந்த போது சுவாசக்குழாயின் உட்சுவர்கள் சிறுத்து இருப்பதை அறிந்தனர். புதிய செயல்முறையான பலூன் டைலேஷன் (காற்றேற்றல் முறை) எனப்படும் சுவாசகுழாயில் பலூன் போன்ற கருவி பொருத்தி சுவாச குழாயை விரிவுபடுத்தும் செயல்முறையை செய்ய திட்டமிட்டனர்.

 

மேலும் மூச்சுக்குழாயில் செயல்முறையை திட்டமிட்டபோதிலும் சுவாச பாதையை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க முடிவுசெய்யப்பட்டது.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட அவருக்கு சுவாசபாதையில் ஏதும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிக முன்னெச்செரிக்கையுடன் கைதேர்ந்த அதிக திறமை வாய்ந்த அனுபவமிக்க தீவிர மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் மயக்கவியல் நிபுணர்கள் உதவியுடன் பலூன் டைலேஷன் எனப்படும் ட்ரகியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டது.

48 மணிநேர கண்காணிப்பிற்கு பிறகு நோயாளியின் மேல் பக்க சுவாச குழாயின் மூலம் சுவாசபாதையில் பலூன் போன்ற விரித்தன்மையுடைய கருவியை பொருத்தினர். சில மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு நோயாளியின் சுவாச பாதையில் இஸ்திரத்தன்மை ஏற்பட்டது.இந்த மொத்த சிகிச்சையும் மிகுந்த கவனத்துடனும் கைதேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் தீவிர கண்காணிப்புடன் செயப்பட்டது.

 

ஏனெனில் எந்த நேரத்திலும் மூச்சுதிணறல் ஏற்படாமல் இருக்க 24 நேர தீவிர கண்காணிப்புக்கு பிறகு நோயாளி எந்த சிரமமின்றி இயல்பு நிலை திரும்பினார். இம்முறை தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. மதுரை அப்போலோ மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். ஹரிகிருஷ்ணன் மயக்கவியல் நிபுணர் டாக்டர் லக்ஷ்மணன் ஆகியோர் ஓர் குழுவாக இந்த முயற்சியில் இறங்கி இந்த சிகிச்சையை செய்து முடித்தனர்.

Leave a Reply

Right Menu Icon