ஜீப்பில் இருந்து கழன்று ஓடிய டயர்.. நூலிழையில் உயிர் தப்பிய இருவர்..!
கேரள மாநிலம் வயநாடு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் டயர் கழன்று உருண்டோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
துல்கர்னி பகுதியில் உள்ள சாலையில் பயணிகளுடன் ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வாகனத்தில் இருந்து விலகிய டயர் சாலையோரத்தில் மோதி நடுரோட்டில் உருண்டோடியது.
இதனை அடுத்து அந்த வழியே வந்த வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டதாலும் ஜீப் வாகனம் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் ஜீப் அச்சு உடைந்ததே டயர் கழன்று ஓடியதற்கு காரணம் என கூறப்படுகிறது.





