--- --:--:-- --

5 முறை துப்பாக்கி சூடு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்லோவாக்யா பிரதமர்..!

3

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் படுகாயம் அடைந்தார். 59 வயதான அவர் தனது ஆதரவாளர்களிடம் பொது பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்பொழுது அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

 

ஐந்து முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்த பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கையின் களவுமாக கைது செய்தனர்.

 

இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை பிரதமர், தாக்குதல் தீவிரவாத தாக்குதல் இல்லை என்றும் எதிர் கட்சியின் சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Right Menu Icon