--- --:--:-- --

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!

1

மிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.

 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாக, தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை,தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதே போன்று, நாளை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல்லிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

 

தென்மேற்கு பருவமழை வரும் மே 31 ஆம் தேதி கேரளாவில் தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் நிகோபார் தீவுகளில் மே 19 ஆம் தேதி முன்கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் கேரளாவில் 31 ஆம் தேதி தொடங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon