--- --:--:-- --

இந்து, முஸ்லிம் பிரிவினை தவிர மோடிக்கு எதுவும் தெரியாது : ஜெய்ராம் ரமேஷ்

6

ந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்துவதை விட வேறு எந்த திட்டமும் பிரதமர் மோடியிடம் இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

 

இந்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரிவினை ஏற்படுத்துவது தன் நோக்கம் அல்ல என்றும், அவ்வாறு இருந்தால் தான் அரசியலுக்கே தகுதி இல்லாதவராகி விடுவேன் என்றும் பிரதமர் மோடி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதவியில் இருந்து விலகி வெளியேற உள்ள பிரதமர் தொடர்ச்சியாக பொய் பேசுபவர் என்பது நாட்டிற்கே தெரியும் என்றார்.

 

கடந்த ஒன்றரை மாதங்களாக தான் பேசி வரும் பேச்சுக்களை பிரதமர் மறைந்திருக்க கூடும் என்றும் ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பிரதமரின் பேச்சுக்களுக்காக அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ் 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்ற முழக்கம் சத்தம் இன்றி புதைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon