5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும்
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்துறை சார்ந்த முக்கியமான செய்தி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு கல்வி ஆண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 10 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் முறை தற்போது நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை கொண்டுவர வேண்டும் என்ற மத்திய அரசின் இதற்கு முன்பாக ஒரு விஷயத்தை தெரிவித்திருந்தது. ஆனால் அதே வைக்கலாமா என்ற முடிவை அந்தந்த மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தபோது கூறியிருந்தது அந்த சமயத்தில் தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டு இருந்தபோது தமிழக அரசு இது குறித்து முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இறுதி முடிவுகள் அமைச்சரவை கூடி எடுத்த பின்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தற்போது அதற்கான அரசாணையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதில் மத்திய அரசு இப்படியான ஒரு விஷயத்தை 2019ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து அமல்படுத்த வேண்டும் என கோரி அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தி வெளியிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பொது தேர்வை நடத்துவதற்கான அனுமதி கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் கேட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் பொது தேர்வை 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழ்விலேயே 2019 இருபதாம் கல்வி ஆண்டிலேயே நடத்திட பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளிப்பதாக அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
பொதுத் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களுடைய தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்ற விஷயத்தையும் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த பொதுத் தேர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அந்தந்த துறை சார்ந்தவர்கள் தொடங்கலாம் என்றும் அதற்கான அனுமதி அளித்து தான் தற்போது அரசாணை வெளியிட்டு இருக்கிறது.





