கோழி இறைச்சியில் விஷம் தடவி கொடுத்ததால் சுருண்டு விழுந்து பலியான நாய்கள்..!
புதுச்சேரியை அடுத்த திருத்தனூரில் இரவில் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சுமி நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியை காவல் காக்கும் என்பதற்காக தெரு நாய்களுக்கு தினமும் இரவு உணவு அளித்து வந்துள்ளனர்.
மறுநாள் காலை 12 நாய்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்து இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் சுற்றி முற்றி பார்த்த பொழுது யாரோ மர்ம நபர்கள் கோழி இறைச்சியில் விஷம் தடவி நாய்களுக்கு கொடுத்தது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





