சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் தனது குடும்பத்துடன் காரில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மீஞ்சூர் வந்த பொழுது சாலையில் திடீரென புகை வந்ததால் காரை நிறுத்தியுள்ளார். அப்போது கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





