அடுத்த மாதம் திருமணம்.. பஸ் அடியில் உறங்கிய டிரைவருக்கு நடந்த சோகம்..!
கோவை காளப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து போரூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் பேருந்து அடியில் படுத்து உறங்கி உள்ளார்.
இதையடுத்து நேற்று காலையில் மற்றொரு ஓட்டுனரான சூர்யா என்பவர் பஸ்ஸை எடுத்துள்ளார். கண்டக்டர் டிக்கெட்டுகளை சோதித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்பொழுது பஸ் அடியில் கருப்புசாமி படுத்து உறங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் சூர்யா பஸ் எடுத்துள்ளார்.
இதில் பஸ் சக்கரம் ஏறி கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்கள் சத்தம் கேட்ட பிறகுதான் மற்றவர்கள் பார்த்து பதறியுள்ளனர். பலியான கருப்புசாமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. அதற்குள் அவரது உயிர் பறிபோனது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





