ஸ்பீடு பிரேக்கரில் ஓவர் ஸ்பீடு.. தூக்கி வீசப்பட்டு இறந்த நபர்..!
குற்றாலம் அருகே கடந்த ஏழாம் தேதி இரவு முன் எச்சரிக்கை கோடு இருந்த வேகத்தடை மீது வேகமாக இரு சக்கர வாகனத்தை செலுத்திய இளைஞர் தடுமாறி கீழே விழுந்து பலியான சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஆனந்த் ஆறுமுகம் என்ற நபர் குற்றாலம் நோக்கி பைக்கில் சென்ற பொழுது விபத்து நேரிட்டுள்ளது. ஹெல்மெட் அணியாததால் தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





