பணம் தர மறுத்த ஜூனியரை தாக்கிய சீனியர்கள்..!
நீலகிரி மாவட்டம் அருகே தனியார் கல்லூரியில் பிரிவு உபச்சார விழாவிற்கு பணம் தர மறுத்த இரண்டாம் ஆண்டு மாணவனை மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
உதகையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு பயிலும் கௌதம் என்ற மாணவனிடம் பிரிவு உபசார விழாவிற்கு பணம் தர கூறப்பட்டுள்ளது.
அப்பொழுது மாணவன் கௌதம் எனது தாயுடன் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது பணம் தர இயலாது எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த கல்லூரியின் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இறுதி ஆண்டு மாணவர்களோடு இணைந்து மாணவன் கௌதமி கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்த பொழுது அவர் நடந்ததை பற்றி வெளியில் சொல்லக்கூடாது என பாதிக்கப்பட்ட மாணவனை மிரட்டியதாக கூறப்படுகிறது.





