டிக்கெடுகளுக்கு இனி சில்லறை பிரச்சனையே வராது..யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெற வசதி..!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் 128 ஏசி பேருந்துகள் உட்பட 1,268 பேருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மட்டும் அல்ல அது கூகுள்பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை எடுத்துக் கொள்ள முடியும். போக்குவரத்து கழகத்தில் அறிமுகப்பட்டுள்ள இந்த சேவை பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





