--- --:--:-- --

வாகனங்களில் ஸ்டிக்கர்.. யார் யாருக்கெல்லாம் அனுமதி.? போக்குவரத்து போலீசார் விளக்கம்

4

சொந்த வாகனங்களில் ஒட்டி இருக்கும் அரசு முத்திரை, கட்சி ஸ்டிக்கர்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மீறுவோர் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது தனி நபர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் சென்னையில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிக்கை, காவல்துறை, முப்படை போன்று துறைகள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

இத்தகைய ஸ்டிக்கர்களை குற்றம் சாட்டப்பட்ட சிலர் தங்களது வாகனங்களில் தவறாக பயன்படுத்தி காவல்துறையினின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருவதாகவும் பலர் தனியார் வாகனங்களில் ஒரு சிலர் அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள் மருத்துவர் அல்லது வழக்கறிஞர் என வெளிப்படுத்தி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் முத்திரை சின்னம் போன்றவற்றை வாகனங்களில் இருந்து நீக்க கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. மீறுவோர் மீது இன்று முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதற்கு இடையே ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால் பிரஸ் அல்லது மீடியா ஸ்டிக்கர்களை வாகனத்தில் ஒட்டிக் கொள்ளலாம் என சென்னை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon